டெங்கு பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பது, அதன் தடுப்பு மற்றும் அதன் கட்டுப்பாட்டுக்கான வளங்களைத் திரட்டுவது மற்றும் அந்த நோயைக் கையாள்வதில் பிராந்தியத்தின் உறுதிப்பாட்டினைப் பறைசாற்றுவது ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 10வது ASEAN சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் போது இந்த நிகழ்வினை அனுசரிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த முதல் பிராந்திய நிகழ்வானது 2011 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான கருத்துரு என்பது ‘டெங்குவிற்கு எதிராகப் போராடுவதற்கான ASEAN பிராந்தியத்தின் உறுதிப்பாடு’ ஆகும்.