TNPSC Thervupettagam

ASEAN டெங்கு தினம் – ஜுன் 15

June 18 , 2021 1168 days 412 0
  • பிராந்திய மற்றும் தேசிய அளவில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இது தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பினால் (Association of South East Asian Nations – ASEAN) அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த தினத்திற்கான கருத்துரு, “பெருந்தொற்றின் மத்தியில் டெங்குவிற்கு எதிராக ஒன்றிணையும் ASEAN” (ASEAN Unite Against Dengue Amidst the Pandemic) என்பதாகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான ASEAN தலைமையின் கருத்துரு, “We care, We prepare, We prosper” என்பதாகும்.
  • 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 10வது ASEAN சுகாதார அமைச்சர்கள் சந்திப்பானது ஜுன் 15 ஆம் தேதியினை ASEAN டெங்கு தினமாக அறிவித்தது.
  • முதலாவது அதிகாரப் பூர்வமான ASEAN டெங்கு தினமானது 2011 ஆம் ஆண்டு ஜுன் 15 அன்று கடைபிடிக்கப் பட்டது.
  • இந்தியாவானது மே 16 ஆம் தேதியன்று தேசிய டெங்கு தினத்தினை கடைபிடிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்