3வது ASEM (Asia Europe Meeting) என்கிற ஆசிய ஐரோப்பிய சந்திப்பு மாநாடு “உலகளாவிய முதியோர் மற்றும் வயதானவர்களுக்கான மனித உரிமைகள்” என்ற தலைப்பின் கீழ் தென்கொரியாவின் சியோல் நகரத்தில் நடத்தப்பட்டது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது இந்திய அணிக்கு தலைமை தாங்கியது. மேலும் சர்வதேச நிறுவனங்களான ஐ.நா. சபை, பிராந்திய அமைப்புகளான UNESCAP (UN Economic and Social Commission for Asia and the Pacific), UNECE (United Nations Economic Commission for Europe), ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான், GANHRI (Global Alliance for National Human Rights Institutions) மற்றும் இதர சர்வதேச அரசு சாரா அமைப்புகளும் இம்மாநாட்டில் பங்கேற்றன.
இம்மாநாடு, கொரியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தாலும் தென்கொரியாவாலும் கூட்டாக இணைந்து நடத்தப்பட்டது.