TNPSC Thervupettagam

ASER 2024 அறிக்கை

January 30 , 2025 2 days 46 0
  • வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை (ASER) 2024 ஆனது ஒரு அரசு சாரா நிறுவனமான பிரதாம் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது.
  • மிகவும் ஒரு அடிப்படை நிலையிலான எண்கணிதத் திறனில் குறைந்தபட்சம் கழித்தல் கணக்குகளை செய்யக் கூடிய மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளின் சதவீதம் 2024 ஆம் ஆண்டில் 33.7% ஆக இருந்த நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் 25.9% ஆக இருந்தது.
  • இதன்படி இரண்டாம் வகுப்பு மட்டத்திலான பாடத்தை படிக்கக்கூடிய ஐந்தாம் வகுப்பு குழந்தைகளின் சதவீதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 44.8% ஆக இருந்த நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் 38.5% ஆக இருந்தது.
  • 2018 ஆம் ஆண்டில் 72.4% ஆக இருந்த சராசரி மாணாக்கர் வருகை ஆனது, 2022 ஆம் ஆண்டில் 73% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 75.9% ஆகவும் உயர்ந்துள்ளது.
  • அதே நேரத்தில், 2018 ஆம் ஆண்டில் 85.1% ஆக இருந்த சராசரி ஆசிரியர் வருகை ஆனது, 2022 ஆம் ஆண்டில் 86.8% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 87.5% ஆகவும் உயர்ந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 44% ஆக இருந்த சுமார் 60க்கும் குறைவான குழந்தைகள் சேர்க்கை பதிவாகியுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளின் சதவீதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 52.1% ஆக கணிசமாக அதிகரித்துள்ளது.
  • 14 வயது முதல் 16 வயது வரையிலான பதின்ம வயதினரில், 89% பேர் வீட்டில் திறன் பேசிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • 3 வயது குழந்தைகளில், முன்பள்ளி நிறுவனங்களில் சேர்க்கையானது 2018 ஆம் ஆண்டில் 68.1% ஆக இருந்த நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் 75.8% ஆக இருந்து 2024 ஆம் ஆண்டில் 77.4% ஆக அதிகரித்துள்ளது.
  • 4 வயது குழந்தைகளில், அகில இந்திய முன்பள்ளி நிறுவனச் சேர்க்கை எண்ணிக்கை ஆனது 2018 ஆம் ஆண்டில் 76% ஆக இருந்து, 2022 ஆம் 82% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 83.3% ஆகவும் அதிகரித்துள்ளது.
  • 5 வயது குழந்தைகளில், 2018 ஆம் ஆண்டில் 58.5% ஆகவும், 2022 ஆம் ஆண்டில் அது 62.2% ஆகவும் உயர்ந்து, 2024 ஆம் ஆண்டில் சுமார் 71.4% ஆகவும் உயர்ந்துள்ளதுடன் இந்த எண்ணிக்கையிலும் பெரிய அதிகரிப்பு பதிவானது.
  • அனைத்து மாநிலங்களிலும், 6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட மாணாக்கர்களின் சேர்க்கையானது 2024 ஆம் ஆண்டில் 95 சதவீதத்தினை விட அதிகமாக உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், அகில இந்திய அளவிலான அரசுப் பள்ளிச் சேர்க்கை ஆனது 66.8% ஆகக் குறைந்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் பள்ளியில் சேராத 15 முதல் 16 வயதுடைய குழந்தைகளின் விகிதம் 7.9% ஆக இருந்தது.
  • இதன்படி பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள பெண்களுக்கான கழிப்பறைகள் உள்ள பள்ளிகளின் விகிதம் ஆனது 2018 ஆம் ஆண்டில் 66.4% ஆக இருந்த ஒரு நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் 68.4% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 72% ஆகவும் அதிகரித்தது.
  • 2024 ஆம் ஆண்டில், 66.2% பள்ளிகளில் விளையாட்டு மைதானம் உள்ள நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் 68.9% ஆகவும், 2018 ஆம் ஆண்டில் 66.5% ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்