TNPSC Thervupettagam

ASI 2020-21 மற்றும் ASI 2021-22

February 19 , 2024 283 days 307 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆனது, 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான தொழில்துறை வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) முடிவுகளை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்புகள் ஆனது, மின்சாரப் பயன்பாட்டுடன்  சேர்த்து 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை நியமிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மின்சார வசதி இல்லாமல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்ற தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும்.
  • ஒட்டு மொத்த மதிப்பில், முந்தைய ஆண்டில் மொத்த மதிப்புக் கூட்டலில் வீழ்ச்சிப் பதிவானதையடுத்து 2020-21 ஆம் ஆண்டில் (தற்போதைய விலையில்) 8.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
  • விளைபொருள் வெளியீட்டை விட (1.9 சதவீதம் சரிந்தது) மூலப்பொருள் உள்ளீட்டில் (4.07 சதவீதம்) அதிக வீழ்ச்சி பதிவானதால் மதிப்பு கூட்டலின் அதிகரிப்பு தூண்டப் பட்டது.
  • 2021-22 ஆம் ஆண்டில், பொருளாதாரம் மீண்டு வந்ததால் மதிப்பு கூட்டல் ஆனது 26.6 சதவிகிதம் உயர்ந்து, உற்பத்தி 35.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
  • இந்த இரண்டு ஆண்டுகளிலும், பதிவு செய்யப்பட்ட முறைசார் உற்பத்தித் துறையானது, முறைசாரா துறையை விட வேகமாக வளர்ச்சியடைந்தது.
  • 2021-22 ஆம் ஆண்டில் வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்த தொழில்துறைகள் அடிப்படை உலோக உற்பத்தி, கற்கரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், மருந்துகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி ஆகும்.
  • இந்தத் தொழில்துறைகளின் மதிப்பு கூட்டல் 34.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • வேலைவாய்ப்பின் மதிப்பீடுகள் ஆனது, பெருந்தொற்று காலத்தின் முதல் ஆண்டில், வேலைவாய்ப்பில் இருந்த நபர்களின் எண்ணிக்கையானது 3.2 சதவீதம் குறைந்து உள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் 1.66 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கையானது 2020-21 ஆம் ஆண்டில் 1.6 கோடியாக குறைந்தது.
  • அதன்பிறகு 7 சதவீதம் அதிகரிப்புடன் 2021-22 ஆம் ஆண்டில் வேலைவாய்ய்ப்பில் இருந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 1.7 கோடியாக உயர்ந்துள்ளது
  • 2017-18 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 49.8 சதவீதமாக இருந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (15 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்) ஆனது 57.9 சதவீதமாக உயர்ந்து ஒரு நிலையான உயர்வைக் கண்டது.
  • 2017-18 ஆம் ஆண்டில் 52.2 சதவீதமாக இருந்த சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின் பங்கு ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 57.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • அதே காலக்கட்டத்தில், உற்பத்தித் துறையில் இருந்த தொழிலாளர்களின் பங்கு 12.1 சதவீதத்திலிருந்து 11.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்