ஐதராபாத்தில் அமைந்துள்ள லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது, ARDE மற்றும் இராணுவத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட, எளிதில் சுமந்து செல்லக் கூடிய ASMI மிதரக தானியங்கு துப்பாக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ASMI ஆனது 2.4 கிலோவிற்கும் குறைவான எடை கொண்டது என்பதோடு இது சர்வதேச அளவிலான இதன் சக ஆயுதங்களைக் காட்டிலும் 10-15% இலகுவானது.
1 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட இறக்குமதி செய்யப் பட்ட ஆயுதங்களுடன் ஒப்பிடும் போது, சுமார் 1 இலட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் 30% குறைவாக இருப்பதால், இதற்கானச் செலவினம் குறைவாகும்.
இது நிமிடத்திற்கு 800 சுற்றுகள் வீதம் தாக்குதல் மேற்கொள்ளும் திறன் கொண்டது என்பதோடு இது 32 சுற்றுகள் கொண்ட தோட்டா சட்டக உள்ளடக்கத் திறனையும் கொண்டது.