Assert AI நிறுவனமானது, கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை பொதுப் பயனாக்குவதற்காக, அதன் புதுமையான அணுகுமுறைக்கு காப்புரிமை பெற்ற ப்ரதம் என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்கள், நிரலாக்கம் அல்லது செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவம் ஆகியவற்றின் அவசியமின்றி Vision AI தொழில்நுட்பத்தின் திறனைப் பயன்படுத்த முடியும்.
ப்ரதம் என்பது இந்தி மொழியில் "முதல்" என்று பொருள்படுகிறது.
இது கணினி அறிவியலின் ஆற்றலை நேரடியாக பயனர்களைச் சென்றடையச் செய்து, ஒளிப்படத் தரவுகளை சிரமமின்றிப் பகுப்பாய்வு செய்து பயன்படுத்த அனுமதிக்கின்ற ஒரு புதுமையான கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.