TNPSC Thervupettagam

ATL சமுதாய தினம் – நிதி ஆயோக்

December 16 , 2017 2566 days 885 0
  • நிதி ஆயோக் அமைப்பானது தன்னுடைய அடல் புத்தாக்க திட்டத்தின் (Atal Innovation Mission) கீழ் அடல் மேம்படுத்து ஆய்வக சமுதாய தினம் (Atal Tinkering Lab’s Community Day) எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.
  • நிதி ஆயோக்-கின் அடல் புத்தாக்க திட்டமானது நாட்டில் புத்தாக்கம் (Innovation) மற்றும் தொழிற்முனைவை (Entrepreneurship) ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களில் முக்கியமான ஒன்றாகும்.
  • இதற்காக நாடு முழுவதும் அடல் மேம்படுத்து ஆய்வகங்கள் (Atal Tinkering Labs) அமைக்கப்பட்டுள்ளன.
  • நாட்டில் தொழிற்முனைவுப் போக்கின் ஊக்குவிப்பிற்கு ஓர் வினையூக்கியாகவும், புத்தாக்க சூழலை உண்டாக்கி அதற்கு கணிசமான ஊக்கம் அளிப்பதற்கும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மாவட்டங்களிலும், முன்மொழியப்பட்டுள்ள இந்திய பொலிவுறு நகரங்களிலும் குறைந்தபட்சம் ஒரு அடல் மேம்படுத்து ஆய்வகங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • முறையான கல்வி அமைப்பில் பதிவு செய்யப்படாத 200 குழந்தைகளுக்கு அடல் மேம்படுத்து ஆய்வகங்கள் மூலம் புத்தாக்கங்களை கொண்டு செல்வதற்காக இந்த சமுதாய முன்னெடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • சமுதாயத்தில் குழந்தைகளிடம் புத்தாங்கங்களை கொண்டு செல்வதன் மூலம் அவர்களை சமுதாய பிரச்சனைகளை தீர்ப்பவர்களாக உருவாக்க முடியும் என்ற யோசனையின் அடிப்படையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்