TNPSC Thervupettagam
March 5 , 2018 2456 days 1182 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையான (Anti-tank Guided Missile - ATGM) நாக் (Nag) ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் சோதனை வரம்பிலிருந்து வெவ்வேறு தூர வரம்பில் அமைக்கப்பட்ட இரு பீரங்கிகளுக்கு எதிராக நாக் ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டு ஏவுகணைகள் மேம்பாட்டு திட்டத்தின் (IGMDP- Integrated Guided Missile Development Programme) கீழ்  DRDO-வினால்  உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5 ஏவுகணைகளுள் நாக் ஏவுகணையும் ஒன்றாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பிற 4  ஏவுகணைகளாவன.
    • திரிசூல்
    • ஆகாஷ்
    • பிரித்வி
    • அக்னி

நாக் ஏவுகணையைப் பற்றி

  • மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையான நாக் ஏவுகணை “Fire and Forget” எனும் கோட்பாட்டின்படி செயல்படுகிறது.
  • ஒருங்கிணைந்த வான்பயண மின்னணுவியல் (Integrated Avionics) சாதனங்களோடு மிகவும் அதிநவீன இமேஜிங் அகச்சிவப்பு ரேடார் தேடல் கருவியும் (IRR - Imaging Infrared Radar Seeker) இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ளது.
  • உலக அளவில் ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஹெலிகாப்டர் மூலம் ஏவத்தகு நாக் ஏவுகணை வடிவமைப்புப் பதிவானது ஹெலினா (HELINA) என்றழைக்கப்படுகிறது.
  • இதன் ஆங்கில விரிவாக்கம் Helicopter - launched NAG என்பதாகும்.
  • இந்த வகை நாக் ஏவுகணையை இந்தியாவின் தாக்குதல் ஹெலிகாப்டர்களான HAL ருத்ரா மற்றும் துருவ் நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் மூலம் ஏவலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்