உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை (Anti Tank Gudied Missile - ATGM) பொக்ரான் வரம்பில் இந்திய இராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இதன் ஆயுத அமைப்பு அதன் முழு எல்லை வரை பரிசோதிக்கப்பட்டது.
ஹெலினா என்பது ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் NAG பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை பதிப்பு ஆகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டு ஏவுகணைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (IGMDP) கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும்.
இது இந்தியாவின் அரசுக்கு சொந்தமான ஒரே ஏவுகணை தயாரிப்பாளாரான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆல் தயாரிக்கப் பட்டது.
ஹெலினா ஆனது உலகின் மிக மேம்பட்ட பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையாகும்.
இது ‘Fire and Forget’ எனும் கோட்பாட்டின் படி செயல்படும். மேலும் இது ஏவப்படும் முன் பூட்டப்படும் முறையில் செயல்படுகிறது. இதன் செயல்பாட்டு வரம்பு 7-10 கி.மீ. (வானில் ஏவப்பட்ட பிறகு) ஆக உள்ளது.