TNPSC Thervupettagam

ATGM ஹெலினா வெற்றிகரமாக பரிசோதிப்பு

August 20 , 2018 2160 days 636 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை (Anti Tank Gudied Missile - ATGM) பொக்ரான் வரம்பில் இந்திய இராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • இதன் ஆயுத அமைப்பு அதன் முழு எல்லை வரை பரிசோதிக்கப்பட்டது.
  • ஹெலினா என்பது ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் NAG பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை பதிப்பு ஆகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டு ஏவுகணைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (IGMDP) கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும்.
  • இது இந்தியாவின் அரசுக்கு சொந்தமான ஒரே ஏவுகணை தயாரிப்பாளாரான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆல் தயாரிக்கப் பட்டது.
  • ஹெலினா ஆனது உலகின் மிக மேம்பட்ட பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையாகும்.
  • இது ‘Fire and Forget’ எனும் கோட்பாட்டின் படி செயல்படும். மேலும் இது ஏவப்படும் முன் பூட்டப்படும் முறையில் செயல்படுகிறது. இதன் செயல்பாட்டு வரம்பு 7-10 கி.மீ. (வானில் ஏவப்பட்ட பிறகு) ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்