Intuitive Machines என்ற நிறுவனத்தின் ஏதீனா மற்றும் ஜப்பானிய தனியார் நிறுவனத் திட்டமான ரெசிலியன்ஸ் ஹகுடோ-R2 ஆகியவை நிலவில் தரையிறங்க உள்ள அடுத்த சந்திர தரையிறங்கு கலங்கள் ஆகும்.
ஏதீனா கலமானது, ஒடிஸியஸ் என்ற தரையிறங்கு விண்கலத்தின் வெற்றி வாய்ப்பை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 17 கலத்திற்குப் பிறகு, நிலவில் மிதமான வேகத்திலான தரையிறக்கத்தை மேற்கொண்ட முதல் அமெரிக்க கலம் ஒடிஸியஸ் ஆகும்.
ஜப்பான் நாட்டின தனியார் நிறுவனமான ஐஸ்பேஸால் இயக்கப்படும் ரெசிலியன்ஸ் ஹகுடோ-R2 என்ற விண்கலம் ஆனது, நிலவினை நோக்கி மறைமுகமானப் பாதையில் பயணிக்கிறது.
ஹகுடோ-R1 விண்கலத்தின் இம்பாக்டர் கருவி மிகவும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப் பட்டதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்குவதற்காக என ஜப்பானின் இரண்டாவது பெரும் முயற்சியாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.