இலண்டனில் நடைபெற்ற ATP (Association of Tennis Professionals) டென்னிஸ் உலக இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான அலெக்ஸாண்டர் ஜேவ்ரேவ் செரிபியாவைச் சேர்ந்த நோவோக் ஜோகோவிக்கை வீழ்த்தினார்.
1995 ஆம் ஆண்டு போரிஸ் பெக்கர் ATP ஒற்றையர் பட்டத்தை வென்றதற்குப் பிறகு தற்பொழுது இப்பட்டத்தை வென்ற முதலாவது ஜெர்மன் வீரராக அலெக்ஸாண்டர் ஜேவ்ரேவ் உருவெடுத்துள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் அலெக்ஸாண்டர் ஜேவ்ரேவ் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரரை வீழ்த்தினார்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் சோக் மற்றும் மைக் பிரயன் ஆகியோர் பிரான்ஸைச் சேர்ந்த பியரி-ஹுகஸ் ஹெர்பெர்ட் மற்றும் நிக்கோலஸ் மகூத் ஆகியோரை வீழ்த்திப் பட்டம் வென்றுள்ளனர்.
இப்போட்டியானது 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு அடுத்து வருடாந்திர ஆண்கள் டென்னிஸ் போட்டியில் இரண்டாவது உயர்தரப் போட்டியாகும்.