இலண்டனில் நடைபெற்ற நிட்டோ ATP டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் பெல்ஜிய வீரர் டேவிட் கோபின்னை வீழ்த்தி பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
1998-ஆம் ஆண்டிற்கு பிறகு ATP சாம்பியன் ஷிப் பட்டம் பெறும் முதல் அறிமுக வீரர் இவரே ஆவார்.
இவ்விருவருக்குமிடையேயான இந்த இறுதிப் போட்டியானது, ATP போட்டிகளின் வரலாற்றிலேயே பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் அறிமுக வீரராக தகுதி பெற்று களமிறங்கிய இரு வீரர்கள் எதிர்முனையில் போட்டியிட்ட முதல் போட்டியாகும்.
இதற்கு முன் 1998-ல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் கொரிட்ஜா அறிமுக வீரராக தனது முதல் வருடத்திலேயே ATP பட்டம் வென்றிருந்தார்.