“ஆஸ்ட்ரோசாட்” என்ற இந்தியாவின் முதலாவது பல அலைநீள செயற்கைக் கோள் ஆய்வகமானது “AUDFs01” எனப்படும் விண்மீனிலிருந்து வெளிப்படும் ஒரு தீவிர புற ஊதா ஒளியைக் கண்டறிந்துள்ளது.
இது பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இந்த விண்மீன் ஆனது ஹப்பிள் பிராந்தியத்தின் தீவிரமான ஆழப் பகுதியில் (Hubble Extreme Deep field) அமைந்துள்ளது.
ஆஸ்ட்ரோசாட் ஆனது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
இதுமுதலாவது அர்ப்பணிக்கப்பட்ட அளவிலான X-கதிர், கண்ணுக்குப் புலப்படக் கூடிய மற்றும் புற ஊதா நிறமாலைப் பட்டைகளில் வானியல் தொடர்பான ஆதாரங்களை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்திய வானியல் திட்டமாகும்.