TNPSC Thervupettagam

AUKUS கூட்டணிக்கு எதிரான தீர்மானம்

October 10 , 2022 651 days 328 0
  • அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க வழி வகுக்கும் AUKUS கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகமையில் மேற் கொள்ளப்பட்ட ஒரு வரைவுத் தீர்மானத்திலிருந்து சீனா பின் வாங்கியது.
  • கடந்த செப்டம்பர் மாதத்தில் AUKUS (ஆஸ்திரேலியா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா) பாதுகாப்புக் கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது.
  • இது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான தொழில் நுட்பத்தைப் பெறுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு உதவி வழங்கும்.
  • இந்த முயற்சியானது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ் தங்கள் பொறுப்புகளை மீறுவதாக சீனா கூறியது.
  • இது சம்பந்தமாக சர்வதேச அணுசக்தி முகமை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் சீனா விமர்சித்தது.
  • இந்தியா உட்பட சர்வதேச அணுசக்தி முகமையில் 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்