சோமாலியாவில் ஆப்பிரிக்க ஒன்றிய ஆதரவு மற்றும் நிலைப்படுத்தல் திட்டத்தினை (AUSSOM) நிறுவுவதற்கான வரைவுத் தீர்மானத்தினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
AUSSOM ஆனது சோமாலியாவில் ஆப்பிரிக்க ஒன்றிய நிலை மாற்றத் திட்டத்திற்குப் (ATMIS) பதிலாக மேற்கொள்ளப் பட உள்ளது.
இது 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரையில் AUSSOM திட்டத்திற்காக 1,040 காவலர்கள் உட்பட 12,626 சீருடைப் பணியாளர்களை நியமிக்க ஆப்பிரிக்க ஒன்றிய (AU) உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
AUSSOM என்ற இந்தத் திட்டமானது அல்-ஷபாபுக்கு எதிரான அதன் போராட்டத்தில் சோமாலியாவிற்கு ஆதரவளிக்கும் என்பதோடு, சோமாலியாவின் நிலைப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்தி, மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவும்.
சோமாலிய கூட்டாட்சி குடியரசு மற்றும் எத்தியோப்பியா கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசு ஆகியவற்றுக்கு இடையேயான சமீபத்திய அங்காரா எனும் பிரகடனம் ஆனது ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.