TNPSC Thervupettagam

AUSSOM திட்டம் - சோமாலியா

December 30 , 2024 23 days 75 0
  • சோமாலியாவில் ஆப்பிரிக்க ஒன்றிய ஆதரவு மற்றும் நிலைப்படுத்தல் திட்டத்தினை (AUSSOM) நிறுவுவதற்கான வரைவுத் தீர்மானத்தினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • AUSSOM ஆனது சோமாலியாவில் ஆப்பிரிக்க ஒன்றிய நிலை மாற்றத் திட்டத்திற்குப் (ATMIS) பதிலாக மேற்கொள்ளப் பட உள்ளது.
  • இது 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரையில் AUSSOM திட்டத்திற்காக 1,040 காவலர்கள் உட்பட 12,626 சீருடைப் பணியாளர்களை நியமிக்க ஆப்பிரிக்க ஒன்றிய (AU) உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
  • AUSSOM என்ற இந்தத் திட்டமானது அல்-ஷபாபுக்கு எதிரான அதன் போராட்டத்தில் சோமாலியாவிற்கு ஆதரவளிக்கும் என்பதோடு, சோமாலியாவின் நிலைப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்தி, மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவும்.
  • சோமாலிய கூட்டாட்சி குடியரசு மற்றும் எத்தியோப்பியா கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசு ஆகியவற்றுக்கு இடையேயான சமீபத்திய அங்காரா எனும் பிரகடனம் ஆனது ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்