TNPSC Thervupettagam
October 3 , 2022 658 days 351 0
  • இந்திய நாடானது, AVGAS 100 LL எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பு ரக விமான எரிபொருளினை அறிமுகப்படுத்தியது.
  • இந்த எரிபொருளானது உந்துவிசை எந்திரங்கள் கொண்ட விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களுக்காக இந்தியன் எண்ணெய்க் கழக நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.
  • இது வெடிக்காமல் அழுத்தத்தினை எதிர்கொள்ளும் எரிபொருளின் திறனை அளவிடச் செய்கின்ற அதிக ஆக்டேன் எண் கொண்ட நீல நிற விமானப் பெட்ரோல் ஆகும்.
  • இந்தியா தற்போது சிறப்பு ரக விமான எரிபொருளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
  • இது குஜராத்தின் வடோதராவில் உள்ள இந்தியன் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
  • வடோதரா சுத்திகரிப்பு நிலையமானது, தற்போது உள்நாட்டுத் தேவைகள் மற்றும் ஏற்றுமதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்குத் திறனை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்