இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI – Food Safety and Standards Authority of India) உணவுப் பெயரிடல் மற்றும் விதிகளை காட்சிப்படுத்துதல் தொடர்பான உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பெயரிடல் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள், 2018 ன் வரைவை கண்காணிப்பதற்காக மூன்று நபர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது.
இக்குழுவிற்கு ஊட்டச்சத்திற்கான தேசிய நிறுவனத்தின் (NIN – National Institute of Nutrition) முன்னாள் இயக்குநர் B. சசிகிரன் தலைமை வகிப்பார். தற்போதைய NIN-ன் இயக்குநர் ஹேமலதா மற்றும் எய்ம்ஸின் அகச்சுரப்பியல் நிபுணர் நிகில் தன்டோன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்களாவர்.
FSSAI ஆனது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பெயரிடல் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள் 2018-ன் வரைவை ஏப்ரல் 2018-ல் வெளியிட்டது.
இது பெட்டியில் அடைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை அதிகமாக இருந்தால் அட்டையில் கண்டிப்பாக சிவப்பு கோடு இட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.
ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த வரைவின் விதிகளை கிடப்பில் வைத்துவிட்டு, வரைவு விதிகளை கண்காணிப்பதற்காக நிபுணர் குழுவை அமைத்துள்ளது.