ஐதராபாத்தின் ஜினோம் பள்ளத்தாக்கில் உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரிமருந்து துறைக்கான வர்த்தக மையத்தை (B – HUB) தெலுங்கான அரசு அமைக்கவிருக்கிறது.
ஜினோம் பள்ளத்தாக்கில் பொது தனியார் கூட்டிணைவின் மூலம் இந்த மையம் அமைக்கப்படவிருக்கிறது. வாழ்க்கை அறிவியலில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் தூய்மையான தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் முதலாவது ஒழுங்கமைக்கப்பட உள்ள திரள் இதுவாகும்.
B-மையம் என்பது நாட்டில் இந்த வகையான முன்முயற்சியில் இது முதலாவது மையமாகும். இதன் நோக்கம் உயிரிமருந்துத் துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாகும்.