அரசாங்கம் ஆனது, புதுப்பிக்கப்பட்ட ‘பேங்க்நெட்’ எனப்படும் இணைய வழி ஏல வலை தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுத் துறை வங்கிகளால் (PSBs) இணைய வழி ஏலத்திற்கு என முன் வைக்கப்படும் அனைத்து சொத்துக்கள் பற்றிய தகவலை இது ஒருங்கிணைக்கும்.
இந்த வலைதளம் ஆனது, ஏலத்தில் வாங்குபவர்களும் முதலீட்டாளர்களும் மிகப் பரந்த அளவிலான சொத்துக்களை ஒரே இடத்தில் கிடைக்கப் பெறச் செய்வதற்கான இடம் ஆகும்.
இந்த வலை தளமானது, சொத்துக்களின் இணைய வழி ஏலங்களைக் கண்டறிந்து அதில் பங்கு பெறும் செயல்முறையை எளிதாக்கி, சொத்துக்களை வாங்குபவர்களும் அவற்றின் முதலீட்டாளர்களும் மதிப்பு மிக்க வாய்ப்புகளை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.