மைக்கேலா கோயல் (Michaela Coel) என்பவர் சிறந்த நடிகைக்கான விருதினையும் ‘I May Destroy You’ எனும் அவரது நிகழ்ச்சிக்காக சிறந்த குறுந்தொடர் விருதினையும் வென்றுள்ளார்.
Normal People எனும் தொடரில் நடித்ததற்காக பால் மெஸ்கல் (Paul Mescal) என்பவருக்கு சிறந்த நடிகர் விருதானது வழங்கப்பட்டது.
BAFTA தொலைக்காட்சி விருதினை வென்றவர்களின் பெயர்ப் பட்டியலானது லண்டனில் உள்ள டெலிவிஷன் சென்டரில் (தொலைக்காட்சி ஒளிபுரப்பு மையம்) அறிவிக்கப் பட்டது.
BAFTA தொலைக்காட்சி விருது (அ) பிரிட்டிஷ் அகாடெமி தொலைக்காட்சி விருதுகளானது 1955 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.