'Bail is the rule, and jail is the exception' கொள்கை
August 20 , 2024 98 days 156 0
டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு பிணை ஆணை வழங்கும் போது, ‘jail and not bail is the exception’ என்ற கொள்கையை உச்ச நீதிமன்றம் புதுப்பித்துள்ளது.
1977 ஆம் ஆண்டில் நீதிபதி கிருஷ்ண ஐயர் என்பவரால் bail is the rule, jail is an exception’ என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
முதன்முதலில் 'இராஜஸ்தான் மற்றும் பால்சந்த் எனப்படும் பாலியா' ஆகியோருக்கு இடையிலான வழக்கின் தீர்ப்பில் இது பயன்படுத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் நீதி செயல்முறையிலிருந்து தப்பியோடுதல், நீதிக்கு இடையூறு விளைவித்தல், சில குற்றங்களைத் திரும்பத் திரும்பச் செய்தல் அல்லது சாட்சிகளை அச்சுறுத்துதல் போன்ற அபாயங்கள் உள்ள சூழ்நிலைகளில் மட்டுமே பிணை ஆணை மறுக்கப்பட வேண்டும் என்று இந்தத் தீர்ப்பு குறிப்பிட்டுக் காட்டுகிறது.