மனநல சேவைத் துறையில் பணியாற்றும் சென்னையில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமான Banyan நிறுவனம் மேற்கொண்ட சில பணிகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'மனநலக் கொள்கை மற்றும் உத்தி சார் செயல் திட்டங்கள்' குறித்த வழிகாட்டுதல்கள் ஆனது, மனநலத் தேவைகள் உள்ளவர்களை எவ்வாறு சமூகத்தில் இணைத்து அதில் இருந்து பயனடையலாம் என்பதைப் பற்றி கூறுகிறது.
உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் Banyan நிறுவனத்தின் பணிகள் குறிப்பிடப் படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக, Banyan நிறுவனம் தனது 'Home Again’ திட்டத்தின் கீழ் மனநலப் பிரச்சினையிலிருந்து மீண்ட நபர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தினை சோதனை அடிப்படையில் உருவாக்கியது.