ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கற்கோயிலான BAPS இந்து மந்திர் சமீபத்தில் திறக்கப் பட்டது.
அபுதாபியின் முதல் இந்து கோவில் நகரா கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது புதிய அறிவியல் நுட்பங்களுடன் தொன்மையான கட்டடக்கலை முறைகளைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.
BAPS இந்து மந்திர் வெப்பநிலை மற்றும் நில அதிர்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப உணர்விகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் கட்டுமானத்தில் எந்த உலோகமும் பயன்படுத்தப்படவில்லை.
இந்தக் கோவிலுக்கான நிலம் ஐக்கிய அரபு அமீரக அரசால் நன்கொடையாக வழங்கப் பட்டது.
துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் இது தவிர மூன்று இந்து கோவில்கள் உள்ளன.