TNPSC Thervupettagam
February 1 , 2019 2007 days 600 0
  • பார்வையாளர் ஒளிபரப்பு ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவின் (Broadcast Audience Research Council of India – BARC) புதிய தலைவராக ஜீ பொழுதுபோக்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான புனித் கோயங்கா நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
  • BARC அமைப்பின் ஒரு நிறுவனத் தலைவராக புனித் கோயங்கா அந்த அமைப்பை நிறுவனப்படுத்துதலில் முக்கிய பங்கு ஆற்றியிருக்கின்றார்.
  • ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரதார ஊடக நிறுவனங்கள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளால் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட BARC இந்தியா ஒரு தொழிற்துறை சார்ந்த ஒத்துழைப்பு நிறுவனமாகும்.
  • BARC இந்தியா, 197 மில்லியன் தொலைக்காட்சி கொண்ட வீடுகளில் சந்தாதாரர்களின் வழக்கங்களை ஆய்வு செய்கின்றது. இந்த வகையில் இது உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை ஆய்வு செய்யும் சேவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்