பேடி பச்சாவோ பேடி பதாவோ (BBBP) திட்டம் ஆனது முழுமையாக மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெறும் மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் திட்டமாகும்.
இது ஒரு பாலின-சார்புடைய குறிப்பிட்டப் பாலினத்திற்கு மட்டும் நன்மைப் பயக்கும் நடைமுறைகளைத் தடுத்தல், பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதை உறுதி செய்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
தேசிய அளவில் பிறப்பின் போது பதிவான பாலின விகிதம் (SRB) ஆனது 2014-15 ஆம் ஆண்டில் 918 ஆக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் இது 930 ஆக மேம்படுத்தப் பட்டுள்ளது (தற்காலிக தரவு).
ஒடிசா மாநிலத்தில் SRB ஆனது 2014-15 ஆம் ஆண்டில் 948 ஆக இருந்த நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் சிறிது சரிந்து 926 ஆக உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் 2014-15 ஆம் ஆண்டில் சுமார் 75.03 சதவீதமாக இருந்த பெண்களின் மொத்த இடைநிலைப் பள்ளிச் சேர்க்கை விகிதம் ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 80.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.