புது டெல்லியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் தமிழ்நாடு மாநில அரசானது மத்திய அரசின் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் (Beti Bachao Beti Padhao- BBBP) சிறந்த செயல்பாட்டிற்காக 2 விருதுகளைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடானது BBBP திட்டத்தில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு, வழிகாட்டல், கண்காணிப்பு மற்றும் இலக்கை அடைதல் ஆகிய பிரிவுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகமானது BBBP திட்டத்திற்கென தமிழ்மொழியில் வழிகாட்டும் புத்தகமொன்றை வெளியிட்டதற்காகவும் ஒரு பரிசினை வென்றது.
செயல்திறன் வாய்ந்த சமூக மேலாண்மைப் பிரிவில் மாவட்ட அளவிலான விருதிற்கு திருவண்ணாமலை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.