TNPSC Thervupettagam
January 17 , 2018 2376 days 780 0
  • வங்கதேசம்-பூடான்-இந்தியா-நேபாளம் வாகனப் போக்குவரத்து ஒப்பந்தத்தின் (Bangladesh Bhutan India Nepal Motor Vehicle Agreement – BBIN MVA) கீழ் வரும் துணைப் பிராந்தியத்தில் பயணப் போக்குவரத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறைகளுக்கு இந்தியா, வங்கதேசம்,  பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
  • இந்த வாகனப் போக்குவரத்து ஒப்பந்தம், நான்கு தெற்காசிய நாடுகளுக்கு இடையே பயணிகள்,  பணியாளர்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான போக்குவரத்தை முறைப்படுத்தும் கட்டுப்பாட்டிற்காக கையெழுத்திடப்பட்டது.
  • ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank), தனது தெற்காசிய துணைப் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்திற்கு (South Asian Sub-Regional Economic Cooperation - SASEC) உதவியளிக்கும் ஒரு பகுதியாக,  இந்த BBIN வாகனப் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு தொழில்நுட்ப,  நிதி மற்றும் ஆலோசனை உதவிகளை ஏற்படுத்தித் தருகின்றது.
  • SASEC என்பது BBIN நாடுகள், மாலத்தீவுகள், இலங்கை மற்றும் சமீபத்தில் சேர்ந்த மியான்மர் ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்கும் பொருளாதார ஒத்துழைப்பு முன்னெடுத்தல் அடிப்படையில் அமைந்த திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்