வங்கதேசம்-பூடான்-இந்தியா-நேபாளம் வாகனப் போக்குவரத்து ஒப்பந்தத்தின் (Bangladesh Bhutan India Nepal Motor Vehicle Agreement – BBIN MVA) கீழ் வரும் துணைப் பிராந்தியத்தில் பயணப் போக்குவரத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறைகளுக்கு இந்தியா, வங்கதேசம், பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த வாகனப் போக்குவரத்து ஒப்பந்தம், நான்கு தெற்காசிய நாடுகளுக்கு இடையே பயணிகள், பணியாளர்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான போக்குவரத்தை முறைப்படுத்தும் கட்டுப்பாட்டிற்காக கையெழுத்திடப்பட்டது.
ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank), தனது தெற்காசிய துணைப் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்திற்கு (South Asian Sub-Regional Economic Cooperation - SASEC) உதவியளிக்கும் ஒரு பகுதியாக, இந்த BBIN வாகனப் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு தொழில்நுட்ப, நிதி மற்றும் ஆலோசனை உதவிகளை ஏற்படுத்தித் தருகின்றது.
SASEC என்பது BBIN நாடுகள், மாலத்தீவுகள், இலங்கை மற்றும் சமீபத்தில் சேர்ந்த மியான்மர் ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்கும் பொருளாதார ஒத்துழைப்பு முன்னெடுத்தல் அடிப்படையில் அமைந்த திட்டமாகும்.