TNPSC Thervupettagam
June 14 , 2018 2258 days 647 0
  • 2016-17 மற்றும் 2017-18 காலக் கட்டங்களில் வெளிப்படுத்திய சீரிய திறமைக்காக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி பாலி உம்ரிகர் விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெங்களூரில் நடைபெற்ற வருடாந்திர BCCI விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்த விருதினை அணித் தலைவருக்கு அளித்தது.

  • மற்றுமொரு பிரிவில், இந்திய பெண்கள் அணித் தலைவருமான ஹார்மன் ப்ரீத் கவுரும், துவக்க ஆட்டக்காரர் ஸ்மிரிதி பந்தனாவும் 2016-17 காலகட்டத்தில் சிறப்பாக விளையாடியமைக்காக முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் (பெண்கள்) விருதினை வென்றுள்ளனர்.
  • 2016-17 காலகட்டத்தில் BCCIயின் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறந்த திறமையை வெளிப்படுத்தியமைக்காக பெங்கால் கிரிக்கெட் சங்கம் சிறந்த மாநில சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2017-18 காலகட்டத்திற்கான சிறந்த மாநில அமைப்பாக டெல்லி மாவட்ட கிரிக்கெட் அமைப்பிற்கு விருது அளிக்கப்பட்டது.
  • இப்பொழுதுதான் முதல்முறையாக பெண்களுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்