BCCI வருடாந்திர விருதுகள் 2025
February 4 , 2025
18 days
97
- ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2023-24 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.
- சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் C.K.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.
- மகளிர் பிரிவில் 2023-24 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேசக் கிரிக்கெட் வீராங்கனை விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.
- சுழற்பந்து வீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வினுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
- ஆடவர் பிரிவில் சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருதினை மும்பை வீரர் சர்பராஸ் கான் பெற்றார்.
- மகளிர் மத்தியில், ஆஷா சோபனாவுக்கு சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனை என்பதற்கான விருது வழங்கப்பட்டது.
- ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற ஒரு பதக்கமும் மந்தனாவுக்கு வழங்கப் பட்டது.
- ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக ஆஃப்-ஸ்பின்னர் தீப்தி சர்மா பதக்கத்தினைப் பெற்றார்.
- BCCI உள்நாட்டுப் போட்டிகள் கோப்பையில் சிறந்த ஆட்டத்திற்கான விருது தனுஷ் கோட்டியனுக்கு வழங்கப்பட்டது.
- BCCI உள்நாட்டுப் போட்டிகள் கோப்பையில் சிறந்த ஆட்டத்திற்கான விருது மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
- இந்தூரைச் சேர்ந்த அக்ஷய் டோட்ரே, இந்த விளையாட்டுத் தொடர் பருவத்திற்கான உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Post Views:
97