2016-17 மற்றும் 2017-18 காலக் கட்டங்களில் வெளிப்படுத்திய சீரிய திறமைக்காக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி பாலி உம்ரிகர் விருதைப் பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெங்களூரில் நடைபெற்ற வருடாந்திர BCCI விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்த விருதினை அணித் தலைவருக்கு அளித்தது.
மற்றுமொரு பிரிவில், இந்திய பெண்கள் அணித் தலைவருமான ஹார்மன் ப்ரீத் கவுரும், துவக்க ஆட்டக்காரர் ஸ்மிரிதி பந்தனாவும் 2016-17 காலகட்டத்தில் சிறப்பாக விளையாடியமைக்காக முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் (பெண்கள்) விருதினை வென்றுள்ளனர்.
2016-17 காலகட்டத்தில் BCCIயின் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறந்த திறமையை வெளிப்படுத்தியமைக்காக பெங்கால் கிரிக்கெட் சங்கம் சிறந்த மாநில சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
2017-18 காலகட்டத்திற்கான சிறந்த மாநில அமைப்பாக டெல்லி மாவட்ட கிரிக்கெட் அமைப்பிற்கு விருது அளிக்கப்பட்டது.
இப்பொழுதுதான் முதல்முறையாக பெண்களுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.