2019 ஆம் ஆண்டின் தேசிய அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property - IP) விருதுக்காக கொச்சியைச் சேர்ந்த பென்னி அந்தோணி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
“காப்புரிமைகள் மற்றும் வணிக மயமாக்கத்தில் முன்னிலையில் உள்ள தனி நபர்கள்” என்ற பிரிவில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இவர் உலகின் முன்னணியில் உள்ள காப்புரிமை பெற்ற மஞ்சள் சாறை உருவாக்கும் BCM – 95-ன் கண்டுபிடிப்பாளர் ஆவார்.
பென்னிக்கு உலக சொத்துரிமை அமைப்பால் “கண்டுபிடிப்பாளர்களுக்கான WIPO பதக்கமும்” வழங்கப்பட்டது.
தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதுகள்
இந்த விருதானது இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தால் வழங்கப்படுகின்றது.
இது காப்புரிமைகள், வடிவமைப்புகள், வணிகக் குறியீடுகள் மற்றும் புவிசார் குறியீடுகள் ஆகிய துறைகளில் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது.