TNPSC Thervupettagam
April 27 , 2019 1920 days 547 0
  • 2019 ஆம் ஆண்டின் தேசிய அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property - IP) விருதுக்காக கொச்சியைச் சேர்ந்த பென்னி அந்தோணி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • “காப்புரிமைகள் மற்றும் வணிக மயமாக்கத்தில் முன்னிலையில் உள்ள தனி நபர்கள்” என்ற பிரிவில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
  • இவர் உலகின் முன்னணியில் உள்ள காப்புரிமை பெற்ற மஞ்சள் சாறை உருவாக்கும் BCM – 95-ன் கண்டுபிடிப்பாளர் ஆவார்.
  • பென்னிக்கு உலக சொத்துரிமை அமைப்பால் “கண்டுபிடிப்பாளர்களுக்கான WIPO பதக்கமும்” வழங்கப்பட்டது.
தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதுகள்
  • இந்த விருதானது இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தால் வழங்கப்படுகின்றது.
  • இது காப்புரிமைகள், வடிவமைப்புகள், வணிகக் குறியீடுகள் மற்றும் புவிசார் குறியீடுகள் ஆகிய துறைகளில் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்