2023 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின் 'Beyond Basics' கணக்கெடுப்பு ஆனது, 26 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.
14 முதல் 18 வயதுக்குட்பட்ட 97.2% இளையோர்கள் ஏதேனும் ஒரு முறைசார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 70.3% இளையோர்கள் அரசு நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு மாநிலத்தில் கணக்கெடுக்கப்பட்ட பதின்ம வயதினரில் நான்கில் ஒரு பகுதியினர், இரண்டாம் வகுப்பு நிலையிலான உரையைப் படிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்பதை இந்த அறிக்கைக் காட்டுகிறது.
அனைத்து மாவட்ட சராசரியுடன் பெரம்பலூர் மாவட்டத்தில் 25% பதின்ம வயதினரால் இரண்டாம் வகுப்பு நிலையிலான உரையைப் படிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்று குறிப்பிடுகிறது.
2.8% இளையோர்கள் எந்த கல்வி நிறுவனத்திலும் சேரவில்லை என்பதோடு,மேலும் இது 14 முதல் 16 வயதிற்குட்பட்ட குழுவினருடன் ஒப்பிடும் போது 17 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழுவினர் மத்தியில் அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டது.
17 முதல் 18 வயதிற்குட்பட்ட பிரிவில், 12.4% ஆண்கள் எந்தவொரு முறைசார் கல்வி நிறுவனங்களிலும் சேரவில்லை என்ற நிலையில் இது பெண்களில் 4% ஆக உள்ளது.
கூடுதலாக, 16.4% பேர் சில வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூரில் 14 முதல் 18 வயதுடைய அனைத்து பதின்ம வயதினரிடையே, 52.1% பேர் குறைந்த பட்சம் வகுத்தல் கணக்கினைச் செய்யக் கூடிய நிலையிலும், 78.3% பேர் குறைந்த பட்சம் ஆங்கில வாக்கியங்களைப் படிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.
டிஜிட்டல் சார்ந்த செயல்களைச் செய்யக்கூடிய நபர்கள் எண்ணிக்கை 63% என்ற என்ற அளவில் தேசிய சராசரி உள்ள அதே வேளையில், தமிழ்நாடு 68.3 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.