புதிய கோவிட் மாறுபாடான BF.7 என்பது ஓமைக்ரான் வகை கொரோனா வைரசின் ஒரு மாறுபாடாகும்.
ஓமைக்ரான் வைரசின் BF.7 என்ற ஒரு துணை மாறுபாட்டு வகையினால் சீனாவில் பதிவாகின்ற கோவிட் பாதிப்பில் மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படுகிறது.
குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தான், BF.7 கோவிட் மாறுபாட்டின் பாதிப்புகள் முதலில் பதிவாகியுள்ளன.
ஓமைக்ரான் துணை வகைகளான BA.5 மற்றும் BF.7 ஆகியவை ஒரே மாதிரியானவை ஆகும்.
BF.7 என்பது BA.5.2.1.7 என்றும் அழைக்கப்படுகிறது.
BF.7 துணை மாறுபாடானது அதன் அசல் வகையான D614G மாறுபாட்டை விட 4.4 மடங்கு அதிக நடுநிலைப் படுத்தல் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது.
ஆய்வக அமைப்பில், தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட நபரின் உடலில் உள்ள ஆன்டிபாடிகள் ஆனது, அசல் வகை வுஹான் வைரசினை அழிப்பதை விட BF.7 வகையினை அழிக்கும் திறனைக் குறைவாகவேக் கொண்டுள்ளன.
BQ.1 எனப் பெயரிடப்பட்ட மற்றொரு ஓமைக்ரான் துணை மாறுபாடானது, அதிக நெகிழ் திறன் கொண்ட துணை மாறுபாடு அல்லாத BF.7 மாறுபாட்டினை விட 10 மடங்கு அதிக நடுநிலைப்படுத்தல் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருந்தது.