TNPSC Thervupettagam
December 25 , 2022 575 days 380 0
  • புதிய கோவிட் மாறுபாடான BF.7 என்பது ஓமைக்ரான் வகை கொரோனா வைரசின் ஒரு மாறுபாடாகும்.
  • ஓமைக்ரான் வைரசின் BF.7 என்ற ஒரு துணை மாறுபாட்டு வகையினால் சீனாவில் பதிவாகின்ற கோவிட் பாதிப்பில் மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படுகிறது.
  • குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தான், BF.7 கோவிட் மாறுபாட்டின் பாதிப்புகள் முதலில் பதிவாகியுள்ளன.
  • ஓமைக்ரான் துணை வகைகளான BA.5 மற்றும் BF.7 ஆகியவை ஒரே மாதிரியானவை ஆகும்.
  • BF.7 என்பது BA.5.2.1.7 என்றும் அழைக்கப்படுகிறது.
  • BF.7 துணை மாறுபாடானது அதன் அசல் வகையான D614G மாறுபாட்டை விட 4.4 மடங்கு அதிக நடுநிலைப் படுத்தல் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது.
  • ஆய்வக அமைப்பில், தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட நபரின் உடலில் உள்ள ஆன்டிபாடிகள் ஆனது, அசல் வகை வுஹான் வைரசினை அழிப்பதை விட BF.7 வகையினை அழிக்கும் திறனைக் குறைவாகவேக் கொண்டுள்ளன.
  • BQ.1 எனப் பெயரிடப்பட்ட மற்றொரு ஓமைக்ரான் துணை மாறுபாடானது, அதிக நெகிழ் திறன் கொண்ட துணை மாறுபாடு அல்லாத BF.7 மாறுபாட்டினை விட 10 மடங்கு அதிக நடுநிலைப்படுத்தல் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்