இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகத்தின் (NPCI) -BHIM சேவை வழங்கீட்டுக் கழக (NBSL) நிறுவனம் ஆனது, பாரத் பண வழங்கீட்டு இடைமுகச் செயலி (BHIM) 3.0 என்பதை அறிமுகப் படுத்தியுள்ளது.
மேம்பட்ட அணுகல், நிதி மேலாண்மைச் செயற்கருவிகள் மற்றும் வணிகங்களுக்கான பிரத்தியேக சலுகைகள் மூலம் தடையற்ற மற்றும் பயனருக்கு உகந்த அனுபவத்தினை வழங்குவதை BHIM 3.0 நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பயன்பாட்டாளர்களுக்குச் சேவை வழங்குவதற்காக என தற்போது 15க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இந்த வசதி கிடைக்கப் பெறுகிறது.