இந்திய விமானப்படையானது, ஆக்ராவில் BHISHM எனப்படும் இடம் பெயர்த்தும் வகையிலான மருத்துவமனைப் பெட்டகங்களை விமானத்தில் இருந்து நிலத்தில் இறக்கும் பரிசோதனையினை மேற்கொண்டது.
இந்த இடம் பெயர்த்தும் வகையிலான மருத்துவமனைகளை இந்திய விமானப்படை பரிசோதனை செய்தது இதுவே முதல் முறையாகும்.
எந்தவொரு இடத்திலும் ஏற்படும் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இடம் பெயர்த்தும் வகையிலான மருத்துவமனைகளைப் பயன்படுத்த இயலும் என்பதால் இந்தப் பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்த இடம் பெயர்த்தும் வகையிலான மருத்துவமனைகள் ஆனது, "BHISHM திட்டம்"- சஹ்யோக், ஹிட்டா மற்றும் மைத்ரிக்கான பாரத் சுகாதார முன்னெடுப்பு என்ற மாபெரும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இது விரைவான நடவடிக்கை மற்றும் விரிவான சுகாதார நலனை வழங்கும் வகையில், ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 200 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.