இந்தியப் பிரதமர் அவர்கள் உக்ரைன் அரசாங்கத்திற்கு நான்கு BHISHM (சஹ்யோக் ஹிதா & மைத்ரி ஆகியவற்றிற்கான பாரத் சுகாதார முன்னெடுப்பு) பெட்டகங்களை வழங்கினார்.
BHISHM பெட்டகங்கள் என்பது அவசரகால சூழ்நிலைகளில் முதல் நிலை மருத்துவ சேவையினை வழங்குவதற்காக என்று வடிவமைக்கப்பட்ட குறைந்த இடமே தேவைப் படுகின்ற, சிறிய மருத்துவ அலகுகளாகும்.
ஒவ்வொரு BHISHM பெட்டகங்களுக்குள்ளும் அனைத்து மருத்துவ உபகரண வசதிகளும் அடங்கும்.
இந்தப் பெட்டகங்கள் உடனடி மருத்துவ சேவைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டுள்ளன.
காயங்கள், இரத்தப் போக்கு, தீக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான பொருட்கள் இதில் அடங்கும்.
இந்தப் பெட்டகங்கள் ஓர் அடிப்படை அறுவை சிகிச்சை அறைக்கு (OR) தேவையான அறுவை சிகிச்சை கருவிகளையும் கொண்டுள்ளது.
இது ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
ஒரு பெட்டகத்தில் பல்வேறு மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்பதோடு இதில் சுமார் 200 பேருக்கு சிகிச்சையளிக்கவும் முடியும்.