TNPSC Thervupettagam

BHISHM பெட்டகங்கள்

August 29 , 2024 89 days 119 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் உக்ரைன் அரசாங்கத்திற்கு நான்கு BHISHM (சஹ்யோக் ஹிதா & மைத்ரி ஆகியவற்றிற்கான பாரத் சுகாதார முன்னெடுப்பு) பெட்டகங்களை வழங்கினார்.
  • BHISHM பெட்டகங்கள் என்பது அவசரகால சூழ்நிலைகளில் முதல் நிலை மருத்துவ சேவையினை வழங்குவதற்காக என்று வடிவமைக்கப்பட்ட குறைந்த இடமே தேவைப் படுகின்ற, சிறிய மருத்துவ அலகுகளாகும்.
  • ஒவ்வொரு BHISHM பெட்டகங்களுக்குள்ளும் அனைத்து மருத்துவ உபகரண வசதிகளும் அடங்கும்.
  • இந்தப் பெட்டகங்கள் உடனடி மருத்துவ சேவைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டுள்ளன.
  • காயங்கள், இரத்தப் போக்கு, தீக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான பொருட்கள் இதில் அடங்கும்.
  • இந்தப் பெட்டகங்கள் ஓர் அடிப்படை அறுவை சிகிச்சை அறைக்கு (OR) தேவையான அறுவை சிகிச்சை கருவிகளையும் கொண்டுள்ளது.
  • இது ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
  • ஒரு பெட்டகத்தில் பல்வேறு மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்பதோடு இதில் சுமார் 200 பேருக்கு சிகிச்சையளிக்கவும் முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்