Bhu-ஆதார் அல்லது ULPIN ஆனது, 2021 ஆம் ஆண்டில் நிலப் பதிவேடுகள் நவீன மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
நாட்டில் உள்ள சுமார் 30 சதவீத கிராமப்புற நிலப் பரப்புகளுக்கு தனித்துவ நிலப் பகுதி அடையாள எண் (ULPIN) அல்லது Bhu-ஆதார் வழங்கப்பட்டுள்ளது.
இது ஒவ்வொரு நிலப் பரப்பிற்கும் 14 இலக்க எண்ணெழுத்து அடையாளத்தை வழங்கச் செய்வதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
ULPIN ஆனது 2021 ஆம் ஆணடில் மத்திய அரசின் எண்ணிம இந்தியா நிலப் பதிவுகள் நவீன மயமாக்கல் திட்டத்தின் (DILRMP) ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
நிலப் பகுதிகளுக்குத் தனித்துவ அடையாள எண்களை வழங்குவதில் மாநிலங்கள் பின்பற்றும் செயல்முறையை நன்கு சீரமைத்து ஒத்திசைவு தன்மையைக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளன.
1.2 கோடிக்கும் அதிகமான நிலப் பரப்புகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில், 1.19 கோடி நிலப் பகுதிகளுக்கு ULPIN உருவாக்கப்பட்டுள்ளது என்று தரவுகள் குறிப்பிடச் செய்கின்றன.