நெதர்லாந்திலுள்ள பிரோசஸ் NV நிறுவனமானது Bill Desk எனும் இந்திய டிஜிட்டல் பணவழங்கீட்டு நிறுவனத்தினை வாங்கி அதனைத் தனது சொந்த நிதிச் சேவை வணிகமான Payu நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 4.7 பில்லியன் டாலர்களாகும்.
இதன்மூலம் Payu மற்றும் Bill Desk ஆகிய ஒன்றிணைந்த நிறுவனமானது மொத்தப் பணவழங்கீட்டு அளவில் உலகளவில் மற்றும் இந்தியாவில் முன்னணி இணையப் பணவழங்கீட்டு நிறுவனமாக திகழும்.