TNPSC Thervupettagam

BIMSTEC தினம் – ஜுன் 06

June 10 , 2021 1176 days 436 0
  • 24வது BIMSTEC தினத்தை முன்னிட்டு பிரதமர் ஜுன் 06 அன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
  • பல்துறைத் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பானது (Bay of Bengal initiative Multi-Sector Technical and Economic Cooperation – BIMSTEC) ஒரு பிராந்தியப் பலதரப்பு அமைப்பாகும்.
  • இது ஏழு தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.
  • இவை இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூடான், இலங்கை, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகியவையாகும்.
  • இந்தியாவின் தடுப்பூசி மைத்ரி முன்னெடுப்பின் கீழ், இந்திய நாடானது BIMSTEC அமைப்பில் உறுப்பினராக உள்ள தமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பி உள்ளது.
  • வங்காளதேசம், மியான்மர், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை உள்ளிட்ட ஐந்து BIMSTEC உறுப்பினர் நாடுகளுக்கு இந்த மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்