TNPSC Thervupettagam

BIMSTEC அமைப்பின் 2வது வேளாண் அமைச்சர்கள் கூட்டம்

November 18 , 2022 612 days 270 0
  • மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் தலைமையில் BIMSTEC அமைப்பின் 2வது வேளாண் அமைச்சர்கள் சந்திப்பினை இந்தியா நடத்தியது.
  • பூடான், வங்காள தேசம், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
  • இந்த மாநாட்டில் BIMSTEC அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கு இடையே வேளாண் ஒத்துழைப்பை (2023-2027) வலுப்படுத்தச் செய்வதற்கான செயல் திட்டம் ஒன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • BIMSTEC அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இதில் வங்காள தேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய ஐந்து தெற்காசிய நாடுகளும், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்