மத்திய ஆசியாவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாடான துர்க்மெனிஸ்தான் நாடானது தனது சொந்த மற்றும் முதல் துர்க்மென் மொழியில் செய்தியனுப்பும் செயலியான BizBarde என்பதைத் தொடங்கியுள்ளது.
இந்த செயலியானது செய்திகள், கோப்புகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரிமாறிக் கொள்ள அனுமதிக்கும்.
துர்க்மெனிஸ்தான் நாடானது முன்னாள் சோவியத் குடியரசின் ஒரு உறுப்பு நாடாகும். இது முகநூல், கட்செவி அஞ்சல் மற்றும் சுட்டுரை போன்ற பல மேற்கத்திய சேவைகளை தடை செய்துள்ள உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்சியமைப்புகளில் ஒன்றாகும்.