Blue Flag என்பது கூட்டுப் போர் பயிற்சியில் பங்குபெறும் நாடுகளுக்கிடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படும் ஓர் பல தரப்பு கூட்டுப் போர் பயிற்சியாகும்.
இந்த ஆண்டு இஸ்ரேலில் நடைபெற உள்ள இந்த பல தரப்பு கூட்டுப் போர் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கெடுக்க உள்ளது.
பல தரப்பு கூட்டுப் போர்ப்பயிற்சியில் முதல் முறையாக இஸ்ரேலிய விமானப்படையுடன் இணைந்து இந்திய விமானப்படை இராணுவ பயிற்சி செய்ய உள்ளது.
பங்கு பெறும் நாடுகளினுடைய செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தவும், சண்டை எதிர்ப்பு அனுபவங்களையும், அது சார் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு தளமாக இந்தக் கூட்டுப் போர் பயிற்சி அமையும்.