பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, BM-04 எனப்படும் நாட்டின் சமீபத்திய மிக குறுகிய தூர தாக்குதல் வரம்புடைய எறிகணையின் மாதிரி மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளது.
BM-04 என்பது அதி மீயொலி வேகத்தில் (மாக் 5 மற்றும் அதற்கும் மேலான ஒரு வேகம்) பறக்கக் கூடியது.
எதிரி நாட்டு ஆயுதங்களின் அணுகல் தடுப்பு / பகுதி மறுப்பு (A2/AD) திறன்களை நடு நிலையாக்க இந்த எறிகணைகள் பயன்படுத்தப்படும்.
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தங்கள் ஆயுதக் தொகுப்பில் அதி மீயொலி எறிகணைகளைக் கொண்டுள்ளன.